சையத் முஷ்டாக் கோப்பை டி20 ஜார்க்கண்ட் சாம்பியன்: இஷான் கிஷண் அபார சதம்;

புனே: உள்நாட்டு அணிகள் மோதும் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிகளின் இறுதிப் போட்டி, புனே நகரில் நேற்று நடந்தது. இதில், ஜார்க்கண்ட் – அரியானா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணியின் துவக்க வீரர் கேப்டன் இஷான் கிஷண், 49 பந்துகளில் 10 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 101 ரன் குவித்தார். பின் வந்த குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81, அனுகுல் ராய் ஆட்டமிழக்காமல், 20 பந்துகளில் 40 ரன்கள் வெளுத்தனர். 20 ஓவரில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 262 ரன் குவித்தது. அதையடுத்து, 263 ரன் வெற்றி இலக்குடன் ஹரியானா அணி ஆடியது. துவக்க வீரர்கள் அர்ஷ் ரங்கா 17 ரன்னிலும், கேப்டன் அன்கித் குமார் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்வந்தோரில் யாஷ்வர்தன் தலால் 53, நிஷாந்த் சிந்து 31, சமந்த் ஜாக்கர் 38 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 18.3 ஓவரில் ஹரியானா 193 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அதனால், 69 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Related Stories: