15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள, 15வது வார்டில் கவுன்சிலர் பதிக்கு போட்டியிடும் திமுக சார்பில் நேற்று முன்தினம் சுதா தணிகை அரசு வேட்பு மனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என மாவட்ட கலெக்டர்  ராகுல்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில். நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் காலியாக உள்ள பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் கடந்த 20ம் தேதி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கியது.

இந்நிலையில், திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த சுதா தணிகை அரசு என்பவரை, காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ சுந்தர் வேட்பாளராக தேர்வு செய்தார். இதனையடுத்து, மதுராந்தகம் நகர திமுக அலுவலகம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு வேட்பாளர் சுதா தணிகை அரசு, மதுராந்தகம் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் சத்திய சாய், பொன்.சிவகுமார் உள்பட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.  

பின்னர், ஊர்வலமாக மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகலைச்செல்வனிடம் 15வது வார்டில் போட்டியிட சுதா தணிகை அரசு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: