சமூக வலைத்தளத்தில் டி.ராஜேந்தர் பற்றி அவதூறு பதிவு கமிஷனரிடம் புகார்

சென்னை: சமூக வலைத்தளங்களில் நடிகர் டி.ராஜேந்தர் குறித்து அவதூறு பதிவு செய்த நபர்கள் மீது லதிமுக சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் கோ.மேகநாதன் நேற்று முன்தினம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கழக பொதுச்செயலாளர் டி.ராஜேந்தர் உடல்நலமின்றி சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்சமயம் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று உள்ளார். இந்த சமயத்தில் யூடியூப் சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவரைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பி வருகின்றனர். இன்னும் ஒரு முகநூல் பக்கத்தில் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி எங்கள் கழக தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் மன வருத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்துகிறது. எனவே ‘காணல் நீர்’ என்ற தலையில் உள்ள முகநூல் பதிவு மற்றும் தவறாக தகவல்கள் வெளியிடும் யூடியூப் சேனல்களையும் தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: