திருவனந்தபுரம்: மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். இது சரித்திர கதை படம். இதில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் உருவான படமிது. இதேபோல் பிரியதர்ஷன் இந்தியில் ஷில்பா ஷெட்டி நடிப்பில் இயக்கிய ஹங்காமா 2 படம் ரிலீசானது. இந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. இந்தநிலையில் பிரியதர்ஷன் தற்போது மலையாளத்தில் புதிய படத்திற்கு தயாராகி வருகிறார். இதில் வளர்ந்து வரும் மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் கதாநாயகனாக நடிக்கிறார். பீஸ்ட் படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோ முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெயில் என்ற மலையாள படத்தில் ஷேன் நிகம் நடித்த போது அதன் தயாரிப்பாளருடன் சம்பள பிரச்னையால் மோதிக்கொண்டார்.