காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 4 மாநில தேர்தல்களுக்கான பாஜ பொறுப்பாளர் நியமனம்

புதுடெல்லி: காஷ்மீர், மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் துணை பொறுப்பாளர்களை பாஜ நியமித்துள்ளது. இதுதொடர்பாக, பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விடுத்துள்ள அறிக்கையில், ‘மகாராஷ்டிரா மாநில தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ்வும், துணை பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரியானா பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், துணை பொறுப்பாளராக திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தேப்பும், ஜார்க்கண்ட் பொறுப்பாளராக மபி முன்னாள் முதல்வரும் ஒன்றிய அமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான், துணை பொறுப்பாளராக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், காஷ்மீர் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானாவில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. காஷ்மீரில் வரும் செப்டம்பரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 4 மாநில தேர்தல்களுக்கான பாஜ பொறுப்பாளர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: