ஆந்திர மாநில துணை முதல்வரான பவன்கல்யாணுக்கு 4 துறைகள் ஒதுக்கீடு: நாளை பொறுப்பேற்பு

திருமலை: ஆந்திர துணை முதல்வரான பவன்கல்யாணுக்கு 4 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நாளை பொறுப்பேற்க உள்ளார். தெலுங்கு திரைப்பட உலகில் ‘பவர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்ட பவன்கல்யாண், தலைமையிலான ஜனசேனா கட்சி ஆந்திரா சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் 21 சட்டமன்ற தொகுதியிலும், 2 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றது. பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பவன்கல்யாண் வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபுநாயுடுவும், பவன்கல்யாணன் துணை முதல்வராகவும் மற்றும் 25 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

மேலும் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜனசேனா கட்சி தலைவரான பவன்கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியுடன் 4 துறைகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாயத்துராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல்துறை, வனம்-சுற்றுச்சூழல் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துறைகள் ஒதுக்கியதையடுத்து நாளை (19ம்தேதி) பவன் கல்யாண் தனது அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்க உள்ளார். மேலும் அவரது கட்சியை சேர்ந்த நாதெண்டல மனோகருக்கு சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையும், கந்துலா துர்கேஷூக்கு கலாச்சாரம் மற்றும் ஒளிப்பதிவு துறையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

The post ஆந்திர மாநில துணை முதல்வரான பவன்கல்யாணுக்கு 4 துறைகள் ஒதுக்கீடு: நாளை பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: