எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அணிவகுக்கும்: மாஜி அமைச்சர் கோகுல இந்திரா ஆதரவு..!!

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அணிவகுக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்திருக்கிறார். சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோகுல இந்திரா ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர், கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவரை பின்தொடர முடிவு செய்துள்ளோம். எந்த இடத்திலும் எதிர் அலை இல்லாத ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அணிவகுக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுப்பார். அறிவித்தபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம் எனவும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குறிப்பிட்டார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆதரவினை தெரிவித்து வருவது நினைவுகூரத்தக்கது.

Related Stories: