ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் மோடி, அமித்ஷா தலையீடு இருக்கிறது: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி விவகாரத்தில் மோடி, அமித்ஷா தலையீடு இருந்து வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 51வது பிறந்தநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.தலைமையில் கேக் வேட்டி நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் கட்சி விவகாரத்தில் மோடியும், அமித்ஷாவின் தலையீடு இருந்து வருகிறது. அதிமுக தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளை உருவாக்கியவர்கள் பாஜவினர். அதிமுகவில் ஒற்றை தலைமையாக இருந்தாலும் சரி இரட்டை தலைமையாக இருந்தாலும் சரி மூன்றாம் தலைமையாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டில் அதிமுக பாஜவின் கைபாவையாக தான் இருப்பார்கள்.எப்படியாவது எதிர்கட்சியாக வரவேண்டும் என்று பாஜ முயற்சி செய்து வருகிறது. அதற்காக பாஜ தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பொய் பிரசாரம் செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: