ரயில் தனியார்வசம் ஒப்படைப்பு ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் இயக்கப்படுவதற்கு ரயில்வே தொழிற்சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி ரயில்வே தொழிற்சங்கமான எஸ்ஆர்இஎஸ் -என்எப்ஐஆர் ஆகிய தொழிற்சங்கம் சார்பில், பெரம்பூர் லோகோ மெயின் கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து பெரம்பூர் கேரேஜ் பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் தனியார் ரயிலில் 98 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுளளதாகவும் இது நாளடைவில்  ஒவ்வொரு ரயிலாக அதிகரித்து ரயில்வே துறை முழுவதும் தனியார் மயமாக்கக்கூடும். எனவே, இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை கோட்ட நிர்வாக தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மத்திய சங்க நிர்வாக தலைவர் எம்.சூரியபிரகாஷ், இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: