குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்பு

மாமல்லபுரம்:  ஒருமாத கால கோடை விடுமுறைக்கு பிறகு குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் உள்ள பள்ளி திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்கு மாணவர்களுக்கு நல்லொழுக்கு வகுப்புகள் நடக்க உள்ளன.

தமிழகம் முழுவதும், ஒருமாத கால கோடை  விடுமுறைக்கு பிறகு நேற்று வழக்கம் போல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில், மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 286 மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை பள்ளி திறக்கப்பட்டது. முதல், நாளான நேற்று போதிய மாணவ - மாணவிகள் வருகை தந்தனர்.

 பள்ளி, தலைமை ஆசிரியர் முருகன் ஒவ்வொரு மாணவரின் கைகளிலும் கிருமி நாசினி தெளித்து, கைகளை சுத்தம் செய்ய வைத்தார்.  பின்னர், அன்போடும், சிரித்த முகத்தோடும் மாணவர்களை வரவேற்று இந்தாண்டுக்கான பாட புத்தகங்களை வழங்கி வகுப்பறைக்கு அழைத்து சென்று அமர வைத்தார். ஒரு, மாத விடுமுறைக்கு பின், மாணவர்கள் பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர்களை பார்த்து ஒருவருக்கொருவர் பாசத்தோடு நலம் விசாரித்து நெகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு முன்னதாக, பள்ளி திறப்பதற்கு கடந்த 2 நாட்களாக பள்ளி வளாகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்தினர். இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் கூறுகையில், ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்றார்.

Related Stories: