பசுமை திரும்பிய வால்பாறை தேயிலை தோட்டங்கள்-வேலைவாய்ப்பு அதிகரிப்பு

வால்பாறை :  வால்பாறை பகுதியில் நிலவி வரும் சாரல் மழையால் தேயிலை மகசூல்  அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வால்பாறை பகுதியில் சுமார்  25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தென்மேற்கு பருவமழை முதல் வாரத்தில் அதிக அளவில் மழை பெய்தது. இந்நிலையில்  கடந்த சில வாரங்களாக மழையுடன் சேர்ந்த இளம் வெயில் நிலவுகிறது. எனவே  பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இளம் தேயிலை அரும்புகள் செடிகளில்  முளைத்திருப்பது காண்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது. மேலும் தற்காலிக  பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது.  எனவே பசுமை படர்ந்து  வால்பாறை அழகாக காட்சி அளிக்கிறது.

Related Stories: