திருவள்ளூர்: கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியத்தில் இருளர், ஆதிதிராவிடர், இதர இன மக்கள் என 169 குடும்பங்களுக்கு ரூ86 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், தனி வட்டாட்சியர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி 169 குடும்பங்களுக்கு ரூ86 லட்சத்து 71 ஆயிரத்து 986 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.