கோயில் நிலங்களில் திருமண மண்டபம், கடைகள் வாகன நிறுத்துமிடம் கட்ட முடிவு: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டும் வகையில் திருமண மண்டபம், கடைகள், வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றுஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நகர்ப்புற நிலங்களில் வருவாயை அதிகரிக்க தேவையான கொள்கைகளை உருவாக்குவதற்காக தனியார் ஆலோசனை நிறுவனத்திற்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களை வாகனம் நிறுத்தும் இடமாகவும், சிறிய அளவிலான கடைகள் கட்டுவதற்கும். திருமண மண்டபங்கள் கட்டுவதற்கும் மற்றும் வேறு வகைகளில் நிலங்களை உபயோகப்படுத்தி வருவாயை பெருக்குவதற்கான திட்டங்களை மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் மூலம் தயாரிப்பதற்கு ஏதுவாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் அணுகுசாலை உள்ள கோயில் நிலங்களின் புல எண்கள், வகைப்பாடு மற்றும் பரப்பளவு மற்றும் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கோயில் நிலங்களின் புல எண்கள், வகைப்பாடு மற்றும் பரப்பளவு ஆகிய விவரங்களை  தர வேண்டும். பட்டியல் சார்ந்த கோயில்களுக்கான நிலங்களை இணை ஆணையர்களும், பட்டியல் சாராத கோயில் நிலங்களை உதவி ஆணையர்களும் நேரடியாக தணிக்கை செய்ய வேண்டும். பின்னர் விவர அறிக்கையை தயார் செய்து  அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: