பறக்கும் விமானத்தில் இருந்து குதித்து துபாயில் ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட துஷாரா

சென்னை: திரைக்கு வந்த ‘போதை ஏறி புத்தி மாறி’, ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த துஷாரா விஜயன், தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘அநீதி’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது விடுமுறையை கொண்டாட துபாய் சென்றார். அங்கு அவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே  தரையில் குதிக்கும் ஸ்கை டைவிங் என்ற சாகச நிகழ்வை மேற்கொண்டார். இதுகுறித்து துஷாரா கூறுகையில், ‘கோ வித் தி ஃப்ளோ என்ற புகழ்பெற்ற பழமொழியால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். தகுந்த பயிற்சி பெற்று, பாதுகாப்பான முறையில் பயிற்சியாளர் உதவியுடன் வானில் இருந்து தரைக்கு பத்திரமாக இறங்கி வந்தேன். வானத்தில் இருந்து கடல், பூமி போன்றவற்றின் பேரழகை அனுபவித்தேன். மனம், உடல் மற்றும் ஆன்மாவுக்கு முழுமையான புத்துணர்ச்சி ஏற்பட்டது. எனக்கு வழிகாட்டியாக இருந்த எனது பயிற்றுநர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி.

ஸ்கைடைவிங் மேற்கொண்ட ஒவ்வொரு நொடியும் சொர்க்கத்தின் அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தரை இறங்கும்போது முழுமையான அமைதியை உணர்ந்தேன்’ என்றார்.

Related Stories: