காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் கிராமத்தில் 10 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் சுமார் ₹10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் பல பகுதிகளில் மானிய நிதியின் கீழ் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி, காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் கிராமத்தில் அம்மன் கோயில் தெருவில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ₹10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. இதனை, எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர், அப்பகுதியில் 34 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி சேதமைடந்துள்ளதால், அதனை ஆய்வு செய்து, அதை வேறு ஒரு இடத்தில் புதிதாக கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் மேனகா இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், எம்.எஸ்.சுகுமார், நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: