ஞானவாபி மசூதி வழக்கு ஜூலை 4க்கு ஒத்திவைப்பு

வாரணாசி: ஞானவாபி மசூதி வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனுவை வாரணாசி மாவட்ட விரைவு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காசி விஸ்வநாதர்-ஞானவாபி வளாகத்தில் உள்ள ங்கர் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதிக்கக் கோரி ஐந்து இந்துப் பெண்கள் தொடர்ந்த மனு விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, ​​முஸ்லிம் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அப்போது, ‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் படி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதைக்  கேட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: