ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிண்டிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் தந்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.