புனே தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி நிறைவு விழா; விமானப்படை தளபதி நிகழ்ச்சியில் பங்கேற்பு

புனே: புனேவில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்த அதிகாரிகளுக்கான வழியனுப்பு விழா அணிவகுப்புடன் விமர்சியாக நடைபெற்றது. பொதுவாக முப்படை அதிகாரிகளுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. டேராடூனில் ராணுவத்தினருக்கும், விமானப்படைக்கு தெலுங்கானாவில் டுண்டிக்களிலும், கப்பல்படைக்கு கேரளாவின் எடிமலாவிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் புனேவில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில் தான் கூட்டாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி இங்கு பயிற்சி முடிந்து 142-வது பிரிவினருக்கான வழியனுப்பு விழா இன்று காலை விமர்சியாக நடைபெற்றது. பயிற்சியை முடித்தவர்கள் மிடுக்கு நடையுடன் கம்பீரமாக அணிவகுத்து சிறப்பு விருந்தினரை கவர்ந்தனர். விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி நிகழ்ச்சியில் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். புனேவில் 1955-ம் ஆண்டு முதல் தேசிய ராணுவ அகாடமி இயங்கி வருகிறது.     

Related Stories: