தமிழ்நாட்டு பயணம் மறக்க முடியாதது என பிரதமர் மோடி ட்வீட்: தமிழகம் மோடியை விரும்புவதாக அமித்ஷா கருத்து!!

சென்னை : : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கட்டமைப்பு செயல்  திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக (ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை, பெட்ரோலியம் பைப் லைன் மற்றும் வீட்டு வசதி சார்ந்த திட்டங்கள்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னை வந்தார். மதுரவாயல்- துறைமுகம் இடையில் ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம் உள்பட ரூ.31,500 கோடியில் 11 திட்டங்ளை பிரதமர் மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரமாண்ட விழாவில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நேற்று இரவு 9.20 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழக பயணம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி மீது அன்பும் பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது. தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விரும்புகிறது. எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரதமரின் சென்னை பயண புகைப்படங்களையும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதே போல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டிற்கு நேற்று வந்த பயணம் மறக்க முடியாதது. நன்றி தமிழ்நாடு, என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என குறிப்பிட்டு தமிழ்நாடு பயணத்தின் 2.07 நிமிட வீடியோவையும் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

Related Stories: