மகளிர் சேலஞ்ச் கிரிக்கெட்: வாழ்வா, சாவா போட்டியில் டிரையல் பிளாசர்ஸ்-வெலோசிட்டி இன்று மோதல்

புனே:புனேயில் மகளிர் சேலஞ்ச் கோப்பை டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெலோசிட்டி வெற்றி பெற்றால் அந்த அணி எந்தவித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

அதே நேரத்தில் தோல்வியடைந்தால் வெலோசிட்டி, டிரையல்பிளாசர்ஸ், சூப்பர் நோவாஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வாகும். இறுதி போட்டி வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.

Related Stories: