ஜூன் 3ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேமுதிக அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா முன்னிலையில் ஜூன் 3ம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் ஜூன் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: