இந்திய நாணயம் போன்றே இருப்பதால் ஏமாறும் வியாபாரிகள்: உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை

சிவகங்கை: திருப்புவனம் சுற்றுவட்டார பகுதி சிறிய கடைகளில் இலங்கையின் நாணயம் புழக்கத்தில் இருப்பதாக குற்றசாட்டு எழுகிறது. இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு வெளியிடபட்ட அந்நாட்டின் 5 ரூபாய் நாணயம் இந்திய  நாணயத்தை போலவே அதே நிறத்திலும் அளவிலும் இருக்கிறது. இந்தியா ரூபாயில் ஆங்கிலம், இந்தி எழுத்துகள் இருக்கும் நிலையில் இலங்கை நாணயத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இருக்கின்றன.

ஆனால்  இந்த வேறுபாட்டை அறியாத சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் இலங்கை நாணயத்தை கடையில் கொடுத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். தற்பொழுது இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும்நிலையில் இந்தியாவில் இந்த நாணயம் எப்படி புழக்கத்திற்கு வந்தது என்பது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு புழக்கத்தில் உள்ள இலங்கை நாணயங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்கள் மூலம் இந்த நாணயம் பயன்பாட்டுக்கு வந்து இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: