நெகமத்தில் குதிரை பந்தயம்

கிணத்துக்கடவு :  திமுக அரசின் ஓராண்டு சாதனையை யொட்டி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் காளியப்பன்பாளையம், ரங்கம் புதூர், மூட்டாம் பாளையம், கக்கடவு விவசாயிகள், இளைஞர்கள் இணைந்து குதிரை வண்டி போட்டி நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில்  பொள்ளாச்சி, பல்லடம்,பழனி,கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை போன்ற இடங்களிலிருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட இந்திய குதிரை வண்டிகள் கலந்து கொண்டது. குதிரைகள் சின்னக்குதிரை வண்டி,நடு குதிரை வண்டி, பெரிய  குதிரைவண்டி மற்றும் பெரிய குதிரை, நடுகுதிரை என 5 பிரிவுகளாக பிரித்து போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்ற குதிரை வண்டிகள் மற்றும் குதிரைகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது. குதிரை பந்தயத்தை பார்க்க சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

Related Stories: