நீடாமங்கலம் அருகில் ரிஷியூர் கிராமத்தில் எள் அறுவடை பணி மும்முரம்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் ரிஷியூர் கிராமத்தில் இயற்கை வேளாண் மையத்தில் இயற்கை முறையில் 10 ஏக்கர் அளவில் சாகுபடி செய்த எள் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. ரிஷியூர் இயற்கை வேளாண் மற்றும் ஒருங்கிணைந்த மையத்தில் இயற்கை முறையில் சுமார் 17 ஏக்கரில் (மாசிப் பட்டம் 10 ஏக்கர், சித்திரைப் பட்டம் 7 ஏக்கர்) எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரும்புச்சத்து நிறைந்த நமது பாரம்பரிய உணவில் எள் முக்கியமானதாகும்.

இது தொடர்பாக விவசாயி செந்தில் உமையரசி கூறுகையில், கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளன. எள்ளில், வைட்டமின் ஏ, பி ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகளை தீர்க்கும். செரிமான பிரச்னை இருப்பவர்கள் தினமும் அரை தேக்கரண்டி எள் அல்லது எள்ளு மிட்டாய் சாப்பிடுவது சிறந்தது என்றார்.

Related Stories: