பூம்புகார் தொகுதி சந்திரபாடியில் ரூ.10 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில்

சென்னை: பூம்புகார் தொகுதி சந்திரபாடியில் ரூ.10 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் உறுப்பினர் நிவேதா எம்.முருகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். மீன்பிடி துறைமுகம் அமைப்பதன் மூலம் 550 மீனவ குடும்பங்கள் பயனடையும்; மீன்களை நல்ல விலைக்கு விற்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories: