கேரளாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி வைரஸ்; தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சேலம்: தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது ஒருவகையான காய்ச்சல்தான், இதனால் பெரிய பாதிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரவும், இதனால் தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பெட்டியில் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் புதியவகை வைரஸ் காய்ச்சலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல்வலி, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் எனப்படும் புதியவகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது. தக்காளி காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சேலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரவும், இதனால் தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: