வடசென்னை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா: ஆர்.டி.சேகர் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீது பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் (திமுக) பேசியதாவது: சுற்றுலா துறைக்கு இந்த ஆண்டு ரூ.246 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். பள்ளிகளில் கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் நடைமுறை குறைந்து வருகிறது. அரசு பள்ளி, தனியார் பள்ளி என அனைத்து மாணவர்களையும் கண்டிப்பாக கல்வி சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வடசென்னை பகுதியில் சுற்றுலா மையம் இல்லை. அதனால் வடசென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும். சென்னையில் நடைபெற்ற நம்ம ஊர் திருவிழாவை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: