கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது 4-வது அலைக்கு வழிவகுக்காது: முன்னாள் தலைமை விஞ்ஞானி கங்காகேத்கர்

டெல்லி: சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது 4-வது அலைக்கு வழிவகுக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் தலைமை விஞ்ஞானி கங்காகேத்கர் தெரிவித்துள்ளார். விஞ்ஞானி கங்காகேத்கர் கூறுகையில் இந்தியாவில் ஒமிக்ரான் மாறுபாட்டின் துணைதிரிபுகள் இருந்தாலும் புதிய திரிபு எதுவும் இல்லை என்பதால் 4-வது அலைக்கான வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் BA2 வகை கொரோனா திரிபுகள் ஒவ்வொரு நாளும் மக்களை பாதிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அனுமதித்துள்ளதால் சமூக இடைவெளி குறைந்து நோய்தொற்று அதிகரித்து வருவதாக கங்காகேத்கர் தெரிவித்தார். மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துவது திரும்பபெறப்பட்டது கொரோனா மீண்டும் பரவ காரணமாகும் என அவர் கூறியுள்ளார்.

நாம் சுதந்திரமாக நடமாட முடியும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் இல்லை என கருதி மக்கள் முகக்கவசம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் தலைமை விஞ்ஞானி கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.     

Related Stories: