ஒன்றிய அமைச்சர் மகளை எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் வலைதள பதிவுக்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அமெரிக்​காவை சேர்ந்த தொழில​திபர் ஜெப்ரி எப்​ஸ்​டீன். சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்​கில் 2019-ம் ஆண்டு ஜூலை​யில் அவர் கைது செய்​யப்​பட்​டார். அதே ஆண்டில் மான்​ஹாட்​டன் சிறை​யில் தற்​கொலை செய்து கொண்​டார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்​வேறு உலக நாடு​களின் தலை​வர்​கள், அமெரிக்​கா​வின் முன்​னணி தொழில​திபர்​களுக்கு எப்​ஸ்​டீனுடன் நெருங்​கிய தொடர்பு இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இவை தொடர்​பான ஆவணங்​கள், வீடியோக்​கள் வெளி​யாகி அதிர்​வலைகளை ஏற்​படுத்தியுள்ளன. ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

ஹர்தீப்சிங்கின் மகளான ஹிமாயனி பூரிக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள், யூடியூப்,இன்ஸ்டாகிராம்,பேஸ்புக்,டிஜிட்டல் செய்தி தளங்களில் கட்டுரைகள் வெளியாகின. தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்,ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் பதிவுகளை தடை விதிக்க கோரியும் ரூ.10 கோடி இழப்பீடு கோரி ஹிமாயனி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி மினிபுஷ்கர்ணா ஹிமாயனி பூரியை எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் அவதூறான உள்ளடக்கத்தை நீக்குமாறு இடைக்கால உத்தரவை நேற்று பிறப்பித்தார்.அவருக்கு எதிராக எந்தவொரு அவதூறான தகவலையும் வெளியிடவோ அல்லது பரப்பவோ கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது.

Related Stories: