தொழில் என்றால் என்ன? உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடக்கம்

புதுடெல்லி: தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் தொழில் என்பதற்கான சட்டபூர்வ வரையறையை மறுவரையறை செய்வது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது.
கடந்த 1978-ம் ஆண்டு வழங்கப்பட்ட பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தொழிலாளர் நல சட்டங்களில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். லாபம் ஈட்டும் நோக்கம் இல்லாவிட்டாலும், முறையான அமைப்புடன் மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படும் அனைத்தும் ‘தொழில்’ என்ற வரையறைக்குள் வரும்” என அன்று 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. இதன் காரணமாகத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளும் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் தொழில் என்பதற்கான சட்டபூர்வ வரையறையை மறுவரையறை செய்வது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று முதல் விசாரணையை தொடங்கியது. 1947ம் ஆண்டின் தொழில் தகராறுச் சட்டத்தின் கீழ் தொழில் என்பதன் வரையறை குறித்து, 50 ஆண்டுகளுக்கும் மேலான சட்ட முன்னுதாரணத்தை இந்த அமர்வு மறு ஆய்வு செய்கிறது. இந்த விசாரணையின் முடிவு, இந்தியாவில் உள்ள தொழிலாளர்-முதலாளி உறவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: