பன்னிமங்கலம்- குருவாடி இடையே வெண்ணாற்றில் பாலம் கட்டும் பணி தீவிரம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே பன்னிமங்கலம்- குருவாடி இடையே வெண்ணாற்றில் பைபாஸ் சாலை பாலம் கட்டும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.திருவாரூர் மாவட்டம். நீடாமங்கலம் அருகில் கோவில்வெண்ணி என்ற ஊரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான்குவழி சாலை அமைப்பதற்காக திமுக ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு அடிக்கல் நாட்டினார். அதற்கான நிதியும் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, வந்த அதிமுக ஆட்சியில் கோவில்வெண்ணியிலிருந்து பன்னிமங்கலம், குருவாடி, நார்த்தாங்குடி, கொரடாச்சேரி அருகில் அபிவிருத்தீஸ்வரம் வழியாக திருவாரூர் சென்று நாகை வரை சாலைக்கான இடங்களை சர்வே செய்து அளந்து விளை நிலங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அதற்கான தொகையையும் வழங்கி பிறகு மிகப்பெரிய ஒப்பந்தகாரர் மூலம் நான்கு வழிச்சாலை அமைக்கும்பணி விறுவிறுப்பாக நடந்தது.

அப்போது ஆட்சிக்கு வந்த மோடி அரசு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது. இதனால் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தளவாட பொருள்கள் மற்றும் உபகரணங்கள் விலை ஏற்றத்தால் ஒப்பந்தகாரருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக நான்குவழி சாலை அமைக்கும் பணி பாதியில் விடப்பட்டது. இவ்வாறு 3 ஆண்டுகளுக்கு மேல் தொடங்காமல் இருந்த சாலை அமைக்கும் பணி மீண்டும் மற்றொரு ஒப்பந்தகாரரால் நான்குவழி சாலை பணி கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீடமங்கலம் அருகில் பன்னிமங்கலம்-குருவாடி இடையே பெரிய வெண்ணாற்றில் நான்கு வழி சாலை (பைபாஸ்) பாலம் கட்டும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த நான்கு வழி சாலை விரைவில் நிறைவடைந்தால் நீடாமங்கலம் கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் நேரடியாக நான்கு வழிசாலைகளில் சென்று விட்டால் நீடாமங்கலத்தில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: