கோயில்களில் நடக்கும் ஒரு கால பூஜைக்கான நிதியை பயன்படுத்தாவிட்டால் சட்டவிதிகள்படி நடவடிக்கை: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: ‘ஒரு கால பூஜை திட்டத்தில் வழங்கப்படும் நிதியை பயன்படுத்த தவறினால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆணையர் குமரகுருபரன் எச்சரித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஒரு கால பூஜை  தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருக்கோயிலின் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு தினசரி பூஜைகளை உரிய நேரத்தில் செய்ய வேண்டும்.  திருக்கோயிலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.  திருக்கோயிலில் வருகை பதிவேட்டினை பேணுதல் வேண்டும்.

மேலும் திருக்கோயிலுக்கு வந்த நேரம் மற்றும் பூஜை முடித்து செல்லும் நேரம் ஆகியவற்றினை பதிவேட்டில் பதிவு செய்திடல் வேண்டும். துறையிலிருந்து ஒரு கால பூஜை திட்ட செலவினத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிக்கு வரவு செலவு கணக்குகள் பேணப்பட வேண்டும். வரவு செலவு கணக்குகள் பசலி தோறும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு கால பூஜை திட்டத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியினை முறையாக பயன்படுத்தாமல் தவறிழைத்தால் நிதி இழப்பு தொடர்பாக சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பதிவும் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும். எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் பூஜை செய்தல் வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: