சமயபுரம், தஞ்சை பெரிய கோயில் உண்டியலில் ரூ.1.37 கோடி ரொக்கம், 2.50 கிலோ தங்கம் காணிக்கை

திருச்சி: சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து நேர்த்தி கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் நேற்று கோயிலின் மண்டபத்தில் எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் ரூ.1,15,84,493 ரொக்கமும், 2.465 கிலோ தங்கமும், 3 கிலோ 545 கிராம் வெள்ளியும், 99 வெளிநாட்டு நோட்டுகளும் இருந்தது.

தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகியம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகர், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.22லட்சத்து 75 ஆயிரத்து 703 இருந்தது. இது தவிர வெளிநாட்டு நோட்டுகள் 23ம் இருந்தன.

Related Stories: