பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்புக்கு 11, 12ம் வகுப்பு மாணவர்களும் இனி விண்ணப்பிக்கலாம்: ஐஐடி மெட்ராஸ் அறிவிப்பு

சென்னை: ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கை:பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பிற்கு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்த இடங்களுக்கு ஏதும் உச்ச வரம்பு இல்லாததால், தகுதியுள்ளோர் இதில் சேரலாம். மேலும் 2021 ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுக்கு தகுதி பெறும் மாணவர்கள் நேரடியாக  பிஎஸ்சி படிப்பில் சேரலாம்.விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற 20ம் தேதிக்குள்  https://onlinedegree.iitm.ac.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: