கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் வகையில் கூட்டாட்சி அமைக்க முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா யோசனை தெரிவித்திருக்கிறது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. உணவுக்கே தள்ளாடும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு முடங்கியுள்ளது. மேலும், மின்சாரம் இல்லாத காரணத்தால் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனை கண்டித்து பொருளாதார பிரச்னையை சரிசெய்யக்கோரியும், அதிபர் பதவி விலக வலியுறுத்தியும் தொடர் போராட்டம் நடத்திய பொதுமக்கள், கொழும்பு நகரில் உள்ள அதிபர் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
