பாபர் அசாம் ரூ.20 கோடிக்கு ஏலம்போவார்: சோயிப் அக்தர் சொல்கிறார்

வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியதாவது: “பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர இளம் வீரர் பாபர் அசாம் சமீப காலங்களாக அணிக்கு 3 வகையான போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு முதுகெலும்பு வீரராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் விராட் கோஹ்லி, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விளையாடி வரும் அவர் பாகிஸ்தானின் முழுநேர கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

அந்த அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரராக இருக்கும் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் கண்டிப்பாக கண்ணை மூடிக்கொண்டு 15-20 கோடிக்கு ஏலம் போவார். அதிலும் இந்தியாவின் கோஹ்லி மற்றும் பாபர் அசாம் ஒரே  அணியில் விளையாடினால் அது மிகச் சிறப்பானதாக இருக்கும். அதிலும்  ஒரே ஐபிஎல் அணிக்காக  தொடக்க வீரர்களாக ஒன்றாக களமிறங்குவதை பார்ப்பதற்கு மிக நன்றாக  இருக்கும்” என்றார்.

Related Stories: