குன்னூரில் தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

குன்னூர்: குன்னூரில்  முகாமிட்டுள்ள யானைகள் தனியார் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்திற்குள் புகுந்து  அங்கிருந்த பழங்கள் மற்றும் வாழை மரங்களை தின்று சென்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றப்புற பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நீலகிரி மாவட்டம்  குன்னூருக்கு படையெடுத்துள்ளன. கடந்த ஒரு வாரமாக குன்னூர்  காட்டேரி பூங்கா அருகே உள்ள கிளண்டேல் தேயிலை தோட்டம் அருகில் 9 யானைகள்  முகாமிட்டுள்ளன. இதனை சுற்றியுள்ள கிராமத்திற்குள் யானைகள் வராமல் இருக்க  வனத்துறை சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யானைகள்  சின்னக்கரும்பாலம் பகுதியில் முகாமிட்டு அங்குள்ள தனியார் தோட்டத்திற்குள்  புகுந்து வாழை மரங்களை நேற்று தின்று சென்றன. அருகில் இருந்த ஸ்ட்ராபெர்ரி தோட்டத்திற்குள் புகுந்தும் பழங்களை தின்றன. இதனால் தோட்ட உரிமையாளருக்கு உரிய நஷ்ட நிவாரணத்தை  வனத்துறையினர்  வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். யானைகள் சாலையோரத்தில் உலா வருவதால்  அதனை பார்க்க ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: