ஸ்ரீபெரும்புதூர் :ஸ்ரீபெரும்புதூர் அருகே, படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர். கடந்த சில மாதங்களுக்கு முன், கார்த்திக் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கரசங்கால் கலைஞர் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி கோபி (42), குன்றத்தூர் விக்கி (25) ஆகியோர், கார்த்திக்கை தாக்கியது தெரிந்தது. இதையடுத்து அவர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோபி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து அவர்களது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
