அரசு விழாவாக மூக்கையா தேவர் நூற்றாண்டு விழா: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: மூக்கையாத் தேவர் மாணவப் பருவத்திலிருந்தே பொதுக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு, நீதிக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும் போராடியவர்.

மூக்கையா தேவரின் நூற்றாண்டு துவக்க விழா ஏப்ரல் 4ம் தேதி ஆரம்பிக்க இருப்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, தியாகி பி.கே. மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாடவும், அவர் பிறந்த ஊரான பாப்பாப்பட்டியில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: