அந்தமான் அருகே காற்றழுத்தம் தமிழகத்தில் சில இடங்களில் மழை

சென்னை: கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்தமான் அருகே ஒரு காற்றழுத்தம் உருவாகி, அது தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாறியது. இது மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது வடக்கு திசையில் அந்தமான் நிகோபார்  தீவு வழியாக நகர்ந்து  புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக தரைக்காற்று உறிஞ்சப்பட்டு தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 24ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

100ஐ தொட்ட மாவட்டங்கள்...

தமிழகத்தில் கடந்த 17ம் தேதி அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரியும், வேலூர், ஈரோடு, மதுரை, சேலம் 102 டிகிரி, திருச்சி திருத்தணி 100 டிகிரி, சென்னை 99 டிகிரி, வெயில் நிலவியது.

18ம் தேதி அதிகபட்சமாக கரூர், ஈரோடு, மதுரை, சேலம்  ஆகிய இடங்களில் 104 டிகிரி, திருச்சி 102 டிகிரி, கோவை, தர்மபுரி, வேலூரில் 100 டிகிரி, சென்னை 99 டிகிரி நிலவியது.

19ம் தேதி அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், சேலம், ஈரோடு 102 டிகிரி, கோவை தர்மபுரி 99 டிகிரி, சென்னையில் 95 டிகிரி நிலவியது.

20ம் தேதி அதிகபட்சமாக கரூர், மதுரையில் 104 டிகிரி வெயில் நிலவியது. ஈரோடு, சேலம் 102 டிகிரி, திருச்சி, வேலூர் 100 டிகிரி, சென்னையில் 96 டிகிரி வெயில் நிலவியது.

Related Stories: