ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான் மரணம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 88. மேக்னம் ஃபோர்ஸ், லெதர் வெப்பன், லையர் லையர் உள்பட பல படங்களில் மிட்செல் ரியான் நடித்துள்ளார். தர்மா அண்ட் கிரேக், டார்க் ஷெடோஸ் ஆகிய வெப்தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றிருந்தார். வயது காரணமாக, படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, குடும்பத்தாருடன் லாஸ்ஏஞ்சல்சில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மிட்செல் ரியான் உயிரிழந்தார்.

Related Stories: