ஆரோவில் அங்காளம்மன் கோயிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்

வானூர்: ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்வசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா கடந்த 26ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ மிளகாய் பொடி அபிஷேகம் மற்றும் தயிர், எலும்பிச்சை, மஞ்சள், பால், இளநீர் உள்ளிட்ட ஆறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Stories: