நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தை ஆதரித்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் பிரசாரம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 165வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி எம்பி ஆகியோர் நேற்று வாணுவம்பேட்டை, பழண்டியம்மன் கோயில் தெரு, என்.எஸ்.கே சாலை, நங்கநல்லூர் இந்திரா நகர், ராம் நகர் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். அப்போது, ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசுகையில், ‘‘உங்கள் பகுதி வளர்ச்சி பெற, அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்றார். ஆர்.எஸ்.பாரதி எம்பி பேசுகையில், ‘‘வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் இந்த பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுத்துள்ளார். அதனை மனதில் வைத்து அவருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்,’’என்றார். காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கபாஷ்யம், சிவராமகிருஷ்ணன், பகுதி தலைவர்கள், ஆதம் ரமேஷ், ஏ.வி.தனசேகரன், மாவட்ட நிர்வாகிகள் ஐயம்பெருமாள் கோவிந்தராஜ், பி.எஸ்.ராஜ், நேரு ரோஜா, ஐ.செல்வம், எஸ்.வடிவேல், சுரேஷ் ஸ்ரீராம், மோகனகிருஷ்ணன், மகாராஜன், ரவிக்குமார், எஸ்.ரமேஷ், கோ.சந்தானம், சி.கே.ஏழுமலை, பி.மகேஷ், எஸ்.சேகர், திமுக சார்பில் லியோ பிரபாகரன், ஜி.ரமேஷ், ஆர்.பாபு, கிறிஸ்டோபர், சரவணன், ராஜ்குமார், எல்ஐசி பாபு, சேது செந்தில், பாபா செந்தில், குணசேகர், வழக்கறிஞர் ஆனந்தகுமார், மதிமுக சார்பில் கராத்தே பாபு, ஜி.திருநா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: