சிறந்த வீரர் கீகன் பீட்டர்சன் : ஐசிசி அறிவிப்பு

துபாய்:மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் மற்றும் பிரேவிஸ், வங்கதேசத்தின் எபாதத் ஹொசைன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் ஜனவரி மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 276 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இலங்கை அணியின் கேப்டன் சாமரி,  வெஸ்ட் இண்டீசின் டீன்டிரா டாட்டின், இங்கிலாந்தின் ஹீதர் நைட் ஆகியோர் இடம் பிடித்தனர். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 168 ரன் விளாசிய ஹீதர்நைட் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: