தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

காஞ்சிபுரம்: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா நடந்தது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன்தாங்கல் மற்றும் பெருநகர் ஆகிய பகுதிகளில் நடந்தது. சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சரவணன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, தலைவர் சாரங்கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு சங்கக் கொடியேற்றி, பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர், காஞ்சிபுரத்தை அடுத்த தூசி, வெள்ளகுளம், பில்லாந்தாங்கல், திருப்பனங்காடு, வெம்பாக்கம், உமையாள்புரம், வயலூர், திருப்பனமூர், சித்தாத்தூர், சோழவரம், நரசமங்கலம், மாங்கால், உக்கம் பெரும்பாக்கம், புதுப்பாளையம், தேத்துறை ஆகிய பகுதிகளிலும் சங்கக் கொடியேற்றி பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், முருகேசன், செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: