இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் அறங்காவலருக்கு விண்ணப்பிப்போரிடம் உறுதிமொழி வாங்க வேண்டும்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  கோயில்களில் அறங்காவலருக்கு விண்ணப்பிப்போரிடம் இருந்து உறுதிமொழி வாங்க வேண்டும் என்று ஆணையர் குமரகுரு பரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்குஅனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யக்கூடிய விண்ணப்பபடிவத்தில் சில திருத்தங்களுடன் அறங்காவலர்கள் நியமனம் விண்ணப்ப படிவம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இனி வருங்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்படிவத்தின் படியே அறங்காவலர்கள் நியமன விண்ணப்பங்கள் பெற வேண்டும்.

அறங்காவலர்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்ப படிவத்தில், அவரது பெயர், வயது, சாதி, மதகம், முழு முகவரி, வசிக்கும் இடத்திற்கும், கோயிலுக்கும் இடையே உள்ள தூரம், சொந்தமாகவுள்ள சொத்துக்கள் (பரப்பு, இருக்கும் இடம், செலுத்தும் தீர்வை, சொந்தமாகவுள்ள நிலங்கள், வீடுகளின் விவரங்கள், சொத்துக்களின் தோராய மதிப்பும், அவற்றில் இருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம், வருமான வரி விதிக்க பெற்றிருக்கிறாரா, பொறுப்புகள் (கடன் முதலியவை), யாதொரு கோயிலில் அல்லது கோயில்களில் விண்ணப்பதாரரால் அல்லது அவர் பாகபிரிவினை ஆகாத குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பின், அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட தான தரும விவரங்கள், விண்ணப்பதாரர் இதற்கு முன் ஒரு கோயிலின் அறங்காவலராக இந்திருந்திருக்கிறாரா, இருந்தால் அதன் விவரங்கள், அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கி விடப்பட்டிருக்கிறாரா அல்லது தள்ளி விடப்பட்டிருக்கிறாரா?,  அறங்காவலர் பதவியை துறந்திருந்தால், எந்த சந்தர்ப்பங்களில் அவர் அவ்வாறு துறந்தார், அறங்காவலராக இருப்பவர்கள் விண்ணப்பதாரருக்கு உறவினர்களாக இருக்கிறார்களா?, இக்கோயிலில் இருந்து வேறு கோயிலில் இருந்து வெகுமதி அல்லது மேல் ஆதாயங்கள் பெற உரிமையுள்ளவர்களா?, கோயிலின் நிலங்கள் மற்றும்  இதர சொத்துக்களுக்கு உரிமை உள்ளவரா, தம் குடும்பத்தின் சார்பில் இந்த கோயில், வேறு யாதொரு கோயில் சம்பந்தப்பட்ட வழக்கில் அக்கறை கொண்டுள்ளரா, இக்கோயிலுக்கு கடன்பட்டிருக்கிறாரா?,  மனுதாரர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா, கோயில் இருக்கும் ஊரில் நற்பெயர் உள்ளதா, மனுதாரர் நன்னடத்தை கொண்டவரா.

கோயில் விஷயங்களில் ஆர்வம் உள்வரா அல்லது தன்னை ஈடுபடுத்தி கொள்ள போதிய நேர் உள்ளவரா, அறங்காவலர் உடைய பதவிப்பணிகளில் கடமைகளை ஆற்றுவதற்கு அவரை தகுதியற்றவராக ஆக்க கூடிய அளவிற்கு மன நலக்குறைவினால் அல்லது மனதளர்ச்சியினால் துன்புறுபவரா அல்லது அருவெறுக்கத்தக்க நோய் எதனாலும் துன்புறுபவரா, சமய நிறுவனத்தின் சொத்தில் நிலுவை தொகை அவரால் கொடுக்கப்பட வேண்டியதா இருக்கிறதா, நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா, தண்டனை தீர்ப்பு எதிர் மாறாக்கப்படாதிருப்பின் அல்லது அந்த குற்றம் மன்னிக்கப்படாமல் இருக்குமாயின் அதன் விவரம் உட்பட 21 கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்க வேண்டும். மேலும், இந்த விவரங்கள் உண்மையானவை எனவும், சரியானவை எனவும் உறுதி மொழி வாங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: