கோயில் புனரமைப்பு பணியை விரைவாக நடக்க மாநில வல்லுநர் குழு வாரத்துக்கு 2 நாட்கள் கூடும்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகளுக்கான அறிக்கைகளை மண்டல அளவிலான வல்லுநர் குழுவினரின் பரிசீலனைக்கு பின்னர், மாநில அளவிலான வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிக அவசர அவசியமாகவுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, கோயில்களில் புனரமைப்புப் பணிகள் விரைந்து நடைபெற வேண்டும் என்பதற்காக மாநில அளவிலான வல்லுநர் குழுக்கூட்டம் இனி பிரதிவாரம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (இரண்டு நாட்கள்) நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. எனவே, கோயில் அலுவலர்கள் தங்களது மண்டலம் /சரகத்தில் உள்ள புனரமைப்பு செய்ய வேண்டிய கோயில்களின் பணிகள் குறித்தான கருத்துருக்களுக்கு மண்டல அளவிலான குழுவின் ஒப்புதலை வழங்கியவுடன் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு கருத்துருக்களை சமர்ப்பித்து பரிந்துரைகளை பெற்று பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: