மக்களுக்கு எதையும் செய்யவில்லை கஜானாவை காலி செய்த அதிமுக-கனிமொழி எம்பி பேச்சு

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் 35 வேட்பாளர்களை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பிரசாரம் செய்து பேசியதாவது:பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக திமுக இருக்கிறது. பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்யலாம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது. கொரோனா காலத்தில் அதிமுக அரசு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக கூறி ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கியது. திமுக ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்ததோடு, ஆட்சிக்கு வந்ததும் ரூ.4ஆயிரத்தை வழங்கியது.

திமுக ஆட்சி போல் ஒரு ஆட்சி, மு.க.ஸ்டாலின் போல் ஒரு முதல்வர் கிடைக்க மாட்டாரா என பிற மாநில மக்கள் எதிர்பார்க்கும் வகையில் திமுக ஆட்சி நடக்கிறது. தேர்தல் பரப்புரையை கூட நிறுத்தி விட்டு, நீட் தேர்விற்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து மசோதாவை நிறைவேற்றினார். அப்போதும் பாஜவை சேர்ந்தவர்கள் வெளியேறி விட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் அதிமுகவா, பாஜகவை சேர்ந்தவரா என சொல்லும் அளவிற்கு இருந்தார். ஆனால், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தாக ஒரே ஒரு வழக்கில் ஓடி ஒளிந்த போது அவருக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு நல்லது கூட நடக்கவில்லை. கஜானாவை காலி செய்து, வீட்டிற்கு எடுத்து செல்வதில் குறியாக இருந்தனர்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜா சொக்கர் கலந்து கொண்டனர்.

Related Stories: