சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்.! குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முனீஷ்வரநாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரைத்தது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பிறகு அலகாபாத் ஐகோர்ட்டின் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நிதிமன்ற பொறுப்பு நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் பொறுப்பு நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: