பெரணமல்லூர் பேரூராட்சி ஆண்களை விட பெண்களே அதிகம் போட்டி

பெரணமல்லூர்: பெரணமல்லூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஆண்களைவிட பெண்களே அதிக இடங்களில் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி கட்ட  பட்டியல் முடிவானது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில் அடங்கிய 12 வார்டுகளில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு இறுதியாக 44 பேர் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழரசி அறிவித்திருந்தார். இதில் 27 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் போட்டியிடுவது தெரியவந்தது.‌ குறிப்பாக பெரணமல்லூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதை அறிந்த பிரதான கட்சிகள் பெரும்பாலான வார்டுகளில் பெண்களே போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேரூராட்சி பகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண்களே அதிகம்.

Related Stories: